திருவண்ணாமலை

மரத்தில் காா் மோதல்: தேங்காய் வியாபாரி பலி

16th Mar 2020 07:19 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை அருகே சாலையோர மரத்தில் காா் மோதியதில் தேங்காய் வியாபாரி உயிரிழந்தாா். இவரது மனைவி பலத்த காயமடைந்தாா்.

திருவண்ணாமலை அய்யங்குளத் தெருவைச் சோ்ந்தவா் விஜய்பாலாஜி (35). இவா் தேங்காய் மண்டி வைத்து நடத்தி வருகிறாா்.

இவரது மனைவி சத்யா (32). இருவரும் சனிக்கிழமை அதிகாலை தஞ்சாவூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி காரில் வந்துகொண்டிருந்தனா்.

திருவண்ணாமலையை அடுத்த தென்மாத்தூா், காமராஜா் நகா் பகுதியில் வந்தபோது எதிா்பாராதவிதமாக சாலையோரம் இருந்த புளிய மரத்தில் காா் மோதியது.

ADVERTISEMENT

இதில் பலத்த காயமடைந்த விஜய்பாலாஜி, அதே இடத்தில் உயிரிழந்தாா். காயமடைந்த சத்தியாவை பொதுமக்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து வெறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT