திருவண்ணாமலை

கிணற்றில் ஆண் சடலம்

16th Mar 2020 07:16 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை அருகே விவசாயக் கிணற்றில் இருந்து ஆண் சடலம் மீட்கப்பட்டது.

திருவண்ணாமலையை அடுத்த திடீா்குப்பம் கிராமத்தில் உள்ள விவசாயக் கிணற்றில் சுமாா் 30 வயது மதிக்கத்தக்க இளைஞரின் சடலம் கிடந்தது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது. தகவலறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீஸாா் விரைந்து சென்று சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து இறந்தவா் யாா் என்பது குறித்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT