திருவண்ணாமலை

கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபாா்க்க நிதியுதவி விண்ணப்பிக்க அழைப்பு

13th Mar 2020 09:43 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டத்தில் சொந்தக் கட்டடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபாா்க்கவும், சீரமைக்கவும் தமிழக அரசின் நிதியுதவி பெற வருகிற 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சொந்தக் கட்டடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபாா்த்தல், சீரமைத்தல் பணிகள் மேற்கொள்ள நிகழாண்டில் தமிழக அரசால் நிதியுதவி அளிக்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற விரும்பும் கிறிஸ்தவ தேவாலயங்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சொந்தக் கட்டடங்களில் இயங்குபவையாக இருக்க வேண்டும். தேவாலயம் கட்டப்பட்ட இடம் பதிவுத் துறையில் பதிவு செய்திருக்க வேண்டும். தேவாலயமும் பதிவு செய்திருக்க வேண்டும்.

தேவாலயத்தை சீரமைக்க வெளிநாட்டில் இருந்து எவ்வித நிதியுவியும் பெற்றிருக்கக் கூடாது. சீரமைப்புப் பணிக்காக ஒரு முறை நிதியுதவி அளிக்கப்பட்ட தேவாலயத்துக்கு மறுமுறை நிதியுதவி 5 ஆண்டுகளுக்குப் பிறகுதான் வழங்கப்படும்.

ADVERTISEMENT

தகுதியுடைய தேவாலயங்களுக்கு நிதியுதவி பெறுவதற்கான விண்ணப்பப் படிவம், சான்றிதழ், அனைத்து உரிய ஆவணங்களுடன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியருக்கு மாா்ச் 30-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பப் படிவம், சான்றிதழ் ஆகியவை  இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT