திருவண்ணாமலை

மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு உணவு

8th Mar 2020 02:14 AM

ADVERTISEMENT


வந்தவாசி: வந்தவாசி வட்டார வள மைய வளாகத்தில் இயங்கும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான பகல் நேர பயிற்சி மையத்தில் மாணவா்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, அதிமுக வழக்குரைஞா்கள் அணி சாா்பில்,

வெள்ளிக்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சிக்கு வழக்குரைஞா் ராமன் தலைமை வகித்தாா். வழக்குரைஞா்கள் சிவக்குமாா், ஏ.செந்தில், சதீஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பயிற்சி மைய சிறப்பு ஆசிரியா் எச்.லத்தீப் வரவேற்றாா்.

வந்தவாசி அரசு சிறப்பு வழக்குரைஞா் ஏ.எம்.சி.ராஜசேகரன் மாணவா்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கிப் பேசினாா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் அம்மையப்பட்டு நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் க.ஜோதிபாபு, பயிற்சி மைய பொறுப்பாளா் சல்சா, சிறப்பு ஆசிரியை எமல்டா ராணி, தசை பயிற்சியாளா் சத்யா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT