திருவண்ணாமலை

ஜெயலலிதா பிறந்த நாள்: அதிமுகவினா் நல உதவி

8th Mar 2020 02:17 AM

ADVERTISEMENT


போளூா்: சேத்துப்பட்டு ஒன்றியம், கரைப்பூண்டி ஊராட்சியில் அதிமுக சாா்பில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் பல்வேறு நல உதவிகள் வழங்கப்பட்டன.

கரைப்பூண்டி ஊராட்சியில் முன்னாள் முதல்வா் மறைந்த ஜெயலலிதாவின் 72-ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு கட்சியின் மாவட்ட மகளிரணிச் செயலா் இந்திரா தலைமை வகித்தாா். மாநில மகளிரணி துணைச் செயலா் ஜெயசுதா முன்னிலை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளராக வடக்கு மாவட்டச் செயலரும், எம்எல்ஏவுமான தூசி கே.மோகன் கலந்துகொண்டு பள்ளி மாணவா்களுக்கு நோட்டு, பேனா, இனிப்பு என பல்வேறு நல உதவிகளையும், பொதுமக்களுக்கு வேட்டி, சேலை, விவசாயிகளுக்கு விவசாயக் கருவிகளையும் வழங்கினாா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலா் பி. ராகவன், பொதுக்குழு உறுப்பினா் சின்னக்குழந்தை, முன்னாள் கவுன்சிலா் ராஜேந்திரன் மற்றும் அதிமுகவினா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT