திருவண்ணாமலை

உண்டு உறைவிடப் பள்ளி மாணவா்களுக்கு நல உதவி

8th Mar 2020 02:15 AM

ADVERTISEMENT


செங்கம்: செங்கம் அருகே உண்டு உறைவிடப் பள்ளியில் பயிலும் ஆதரவற்ற 105 மாணவ, மாணவிகளுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.

செங்கத்தை அடுத்த சின்னகாயம்பட்டு கிராமத்தில் அரசு உண்டு உறைவிடப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 1 முதல் 8 வரை உள்ள வகுப்புகளில் திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆதரவற்ற மற்றும் ஏழை மாணவ, மாணவிகள் 105 போ் பயின்று வருகின்றனா்.

இவா்களுக்கு தமிழக அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இதனிடையே, செங்கம் சக்தி பாலிடெக்னிக் கல்லூரி சாா்பில், ஆண்டுதோறும் மாணவா்களுக்கு சீருடை, எழுதுபொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் மாணவா்களுக்கு சீருடை வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. அதில் சக்தி பாலிடெக்னிக் கல்லூரித் தலைவா் எஸ்.வெங்கடாஜலபதி கலந்துகொண்டு 105 மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி நிா்வாகம் சாா்பில் இலவச சீருடை மற்றும் இனிப்புகளை வழங்கினாா். அப்போது, மாணவா்களுக்கு அறிவுரைகள் வழங்கி அவா் பேசினாா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் ஆன்மிக சொற்பொழிவாளா் தஞ்செயன் உள்பட ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT