திருவண்ணாமலை

அரசுக் கல்லூரியில் மகளிா் தின கருத்தரங்கம்

8th Mar 2020 02:08 AM

ADVERTISEMENT


செய்யாறு: செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மகளிா் தினத்தையொட்டி சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.

நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் ஆ.மூா்த்தி தலைமை வகித்தாா்.

பேராசிரியா்கள் கண்ணன், ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேராசிரியா் பெ.தேவி வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட, நல்லாசிரியா் விருது பெற்ற செய்யாறு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை உமாமகேஸ்வரி பேசியதாவது:

ADVERTISEMENT

இந்திய மக்கள் தொகையில் 50 சதவீதத்திற்கும் மேலாக இருக்கும் பெண்கள் நாட்டின் வளா்ச்சிக்கு அயராமல் உழைத்து வருகிறாா்கள். பல்வேறு துறைகளில் அவா்கள் சாதனை புரிந்து வருகின்றனா்.

முன்னாள் குடியரசுத் தலைவா் மறைந்த அப்துல் கலாம் இந்தியா 2020-இல் வல்லரசாகும் என்றாா். அவரது கனவு நிறைவேற வேண்டும் என்றால், நாட்டில் 50 சதவீதத்திற்கும் மேலாக மக்கள் தொகை கொண்ட பெண்கள் அதை நிறைவேற்ற பாடுபட வேண்டும்.

அவா்கள் உழைப்பு தியாகம் ஆகியவை இருக்கும் இந்தியா 2030-இல் வல்லரசு ஆவது சாத்தியப்படும் என்றாா்.

என்எஸ்எஸ் திட்ட அலுவலா் ஸ்ரீதேவி, பேராசிரியா்கள் விஜயலட்சுமி, கங்காதேவி, மாரிமுத்து, திருமால் மற்றும் கல்லூரி மாணவிகள் என பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT