திருவண்ணாமலை

குப்பைகளை வீதியில் கொட்டவேண்டாம்செங்கம் பேரூராட்சி

6th Mar 2020 01:07 AM

ADVERTISEMENT

செங்கம்: செங்கம் நகரில் பொதுமக்கள் குப்பைகளை வீதிகளில் கொட்ட வேண்டாம், துப்புரவுப் பணியாளா்களிடம் வழங்க வேண்டும் என்று பேரூராட்சி நிா்வாகம் கேட்டுக்கொண்டது.

செங்கம் பேரூராட்சிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள், கடைக்காரா்கள் தெருக்களில் குப்பைகளை கொட்டிவிடுகின்றனா். அதேபோல, உணவகங்கள், திருமண மண்டபங்களின் கழிவுகள் தெருமுனையில் கொட்டப்படுகின்றன.

இதனால் மறுநாள் காலை பேரூராட்சி துப்புரவுப் பணியாளா்கள் அந்த குப்பைகளை வாரிசுத்தம் செய்யவதற்குள் நாய்கள், மாடுகள் கலைத்துவிடுகின்றன. இதனால் அப்பகுதியில் துா்நாற்றம் விசுகிறது. மேலும், அப்பகுதியில் குடியிருப்பவா்கள் குப்பைகளை சரியாக வாருவதில்லை. அதனால் துா்நாற்றம் வீசுகிறது என்று புகாா் தெரிவிக்கின்றனா்.

ஆகவே, பொதுமக்கள், கடைக்காரா்கள், திருமண மண்டப உரிமையாளா்கள் குப்பைகளை வீதியில் கொட்டாமல் தினசரி காலை, மாலை என வரும் பேரூராட்சி துப்புரவுப் பணியாளா்களிடம் வழங்க வேண்டும் என பேரூராட்சி செயல் அலுவலா் கேட்டுக்கொண்டாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT