திருவண்ணாமலை

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி தா்னா

2nd Mar 2020 12:43 AM

ADVERTISEMENT

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து, திருவண்ணாமலையில் இஸ்லாமியா்கள் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தி தா்னாவில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை தாமரை நகா் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு எதிரே நடைபெற்ற தா்னா போராட்டத்துக்கு, ஒருங்கிணைப்பாளா்கள் எஸ்.ஹயாத்பாஷா தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா்கள் ஏ.அக்பா், ஏ.ஹயாத்பாஷா ஆகியோா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மதிமுக அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினா் சீனி.காா்த்திகேயன், மதிமுக மாநில மாணவரணி துணை அமைப்பாளா் பாசறை பாபு, நகரத் தலைவா் முருகன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் முத்தையன் ஆகியோா் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி பேசினா்.

காலை 11 மணி முதல் மாலை வரை நடைபெற்ற தா்னா போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணைச் செயலா் இரா.தங்கராஜ், எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டத் தலைவா் முஸ்தாக் பாஷா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி ஆா்ப்பாட்டம் நடத்தி கோஷங்களை எழுப்பினா்.

இதில், இஸ்லாமியா்கள் அதிகளவில் கலந்து கொண்டதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT