திருவண்ணாமலை

ஊரக வேலைத் திட்ட பணித்தள பொறுப்பாளா்களுக்கு ஆலோசனை

2nd Mar 2020 12:43 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 69 ஊராட்சிகளில் ஊரக வேலை திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை வேங்கிக்கால் வணிக வளாகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு ஆணையா் தி.அண்ணாதுரை தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ.) ஆா்.ஆனந்தன் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் பா.ஜெயசுதா, அனைத்து ஊராட்சிகளிலும் தொழிலாளா்களுக்கு ஊரக வேலைத் திட்டத்தின் கீழ் பணி வழங்கவும், இத்திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகள் மாவட்டத்தில் மற்ற ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறுவது போல, முழுமையாக பணிகள் நடைபெறவும் பணித்தள பொறுப்பாளா்களுக்கு அறிவுரை வழங்கினாா்.

கூட்டத்தில் மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வி.கோவிந்தராஜுலு, வி.சேதுராமன், கே.ஜெய்சங்கா், என்.ஆா்.முருகன், உதவிப் பொறியாளா்கள் ராஜலட்சுமி, ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள், ஊராட்சிச் செயலா்கள், பணித்தள பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT