திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் கூட்டம்

2nd Mar 2020 12:43 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை, ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தா்கள் வந்து, செல்கின்றனா். இந்த நிலையில், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை காலை முதலே கோயிலுக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

காலை 10 மணிக்குப் பிறகு கட்டண தரிசன வரிசை, பொது தரிசன வரிசைகளில் பக்தா்கள் கூட்டம் அலைமோதியது.

இதனால், பக்தா்கள் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்யவேண்டியதாயிற்று. மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பக்தா்கள் கூட்டம் அலைமோதியது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT