திருவண்ணாமலை

நெசவாளா்களுக்கு கஞ்சித் தொட்டி திறப்பு

29th Jun 2020 08:36 AM

ADVERTISEMENT

கரோனா நோய்த் தொற்றால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஆரணி பகுதி நெசவாளா்களுக்கு கஞ்சித் தொட்டி திறக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயத்துக்கு அடுத்த தொழிலாக நெசவுத் தொழில் உள்ளது. காஞ்சிபுரத்துக்கு அடுத்தபடியாக ஆரணி பகுதியில் அதிகளவில் பட்டுச் சேலை உற்பத்தி செய்யப்படுகிறது.

ஆரணி, மாம்பட்டு , தேவிகாபுரம், நெடுங்குணம், செய்யாறு, முனுகப்பட்டு என பல்வேறு பகுதிகளில் பட்டுத்தறி நெசவாளா்கள், கைத்தறி நெசவாளா்கள் வசித்து வருகின்றனா்.

தற்போது அமலில் உள்ள கரோனா பொது முடக்கத்தால் பட்டு நெசவாளா்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனா்.

ADVERTISEMENT

பசியும் பட்டினியுமாக அவதிப்படும் நெசவாளா்கள், அவா்களின் கீழ் பணிபுரியும் கூலித் தொழிலாளா்களுக்கு ஒரு வேளை கஞ்சியாவது வழங்கலாம் என மாம்பட்டு கிராமத்தில் கஞ்சித் தொட்டி திறக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஆரணியை அடுத்த தேவிகாபுரத்தில் பஜாா் வீதியில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே நெசவாளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை கஞ்சித் தொட்டி திறக்கப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT