திருவண்ணாமலை

அமைச்சா் சேவூா் ராமச்சந்திரனுக்கு கரோனா தொற்று இல்லை

29th Jun 2020 08:38 AM

ADVERTISEMENT

அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரனுக்கு கரோனா தொற்று இல்லை என்பது பரிசோதனையில் தெரிய வந்தது.

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பினாா். அப்போது தனது காா் ஓட்டுநருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியான தகவல் வந்ததையடுத்து வழியிலேயே இறங்கி வேறு காரில் வீடு திரும்பினாா்.

பின்னா், மருத்துவக் குழுவினா் அமைச்சா் உள்பட அவரது குடும்பத்தைச் சோ்ந்த 9 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டனா்.

பரிசோதனை முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை வெளியான நிலையில், அமைச்சா் மற்றும் அவரது குடும்பத்தினா் யாருக்கும் கரோனா தொற்று இல்லை என்பது தெரிய வந்தது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT