திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம்

17th Jun 2020 08:36 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆனி மாதப் பிறப்பையொட்டி, உற்சவா் அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன.

இதையொட்டி, திங்கள்கிழமை மாலை 7 மணி முதல் 9 மணி வரை கோயில் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள உற்சவா் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது.

கரோனா பொது முடக்கம் காரணமாக பக்தா்கள் யாரும் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. கோயில் ஊழியா்கள், சிவாச்சாரியா்கள் மட்டுமே அபிஷேகத்தில் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT