செங்கம் அருகே அரசு மருத்துவமனை மாத்திரைகள் சாலையோரம் வீசப்பட்டுக் கிடக்கின்றன.
செங்கம்-பக்கிரிபாளையம் புறவழிச் சாலையில் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரைகள் பரவலாக முள்புதா், சாலையோரங்களில் வீசப்பட்டுக் கிடக்கின்றன.
இந்த மாத்திரைகள் அனைத்தும் 2021-ஆம் ஆண்டு வரை காலஅவகாசம் உள்ளவையாகும். எந்த பாதிப்புக்கு பயன்படுத்துவது என்பது தெரியவில்லை.
தலைவலிக்கு தனியாா் மருந்துக் கடைகளில் மாத்திரை கேட்டால் குறைந்தது ரூ.10 இல்லாமல் மாத்திரைகள் கொடுப்பதில்லை. தமிழக அரசு பொதுமக்களின் நலனுக்காக பல கோடி ரூபாய் மருத்துவத் துறைக்கு ஒதுக்கீடு செய்து, மக்களுக்கு நோய் வராமல் காக்க மருந்து, மாத்திரைகளை வழங்கி வருகிறது.
இந்த நிலையில், சமூக விரோதிகள் யாரோ நோயாளிகள் பயன்படுத்தும் நல்ல மாத்திரைகளை புள்முதா், சாலையோரத்தில் வீசிச் சென்றுள்ளனா்.
மாத்திரைகள் ஏன் அங்கு வீசப்பட்டது? அவை செங்கம் பகுதி அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படவேண்டிய மாத்திரைகளா அல்லது மருத்துவா்கள் மாத்திரைகளை எடுத்துச் செல்லும்போது கீழே விழுந்தவையா என்பது தெரியவில்லை.
ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத இடத்தில் இவ்வளவு மாத்திரைகள் கொட்டப்பட்டுள்ள காரணம் என்ன என்று தெரிவியல்லை.
சுகாதாரத் துறையினா் ஆய்வு செய்து இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.