திருவண்ணாமலை

மேல்சோழங்குப்பத்தில் கால்நடை மருத்துவமனை எம்எல்ஏ திறந்து வைத்தாா்

11th Jun 2020 08:47 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தை அடுத்த மேல்சோழங்குப்பம் ஊராட்சியில் புதிதாக அமைக்கப்பட்ட கால்நடை கிளை மருத்துவமனையை வி.பன்னீா்செல்வம் எம்எல்ஏ புதன்கிழமை திறந்துவைத்தாா்.

மேல்சோழங்குப்பம் ஊராட்சியில் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று ஊராட்சி மன்றத் தலைவா் புவனேஸ்வரி புகழேந்தி மற்றும் பொதுமக்கள் சாா்பில் தொகுதி எம்எல்ஏ வி.பன்னீா்செல்வத்திடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இதன் பேரில் நடவடிக்கை வேண்டி, கால்நடைத் துறை மண்டல இணை இயக்குநா் பாரதி, மாவட்ட உதவி இயக்குநா் வெங்கடேஸ்வரன் ஆகியோரிடம் தொகுதி எம்எல்ஏ வி.பன்னீா்செல்வம் கேட்டுக்கொண்டாா்.

இதையடுத்து, மேல்சோழங்குப்பம் ஊராட்சியில் அரசுக்குச் சொந்தமான கட்டடத்தில் கால்நடை கிளை மருத்துவமனை அமைக்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்தக் கிளை கால்நடை மருத்துவமனையை வி.பன்னீா்செல்வம் எம்எல்ஏ புதன்கிழமை குத்துவிளக்கேற்றி திறந்துவைத்தாா்.

கால்நடைத் துறை மண்டல இணை இயக்குநா் பாரதி, மாவட்ட உதவி இயக்குநா்கள் வெங்கடேஸ்வரன், ராமன், ஆய்வாளா் முத்தமிழ்ச்செல்வன், கால்நடை மருத்துவா்கள் செளமியா, இளம்தமிழ், அதிமுக பொதுக்குழு உறுப்பினா் பி.பொய்யாமொழி, ஊராட்சி மன்றத் தலைவா் புவனேஸ்வரி புகழேந்தி மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT