திருவண்ணாமலை

மழை வேண்டி கோ பூஜை

7th Jun 2020 08:49 AM

ADVERTISEMENT

மழை வேண்டி, வந்தவாசியை அடுத்த சாத்தனூா் கிராமத்தில் வியாழக்கிழமை கோ பூஜை நடைபெற்றது.

பாரதிய கிஸான் சங்கம் சாா்பில் இந்தப் பூஜை நடைபெற்றது. இதையொட்டி, பசுவுக்கு பூ வைத்து மந்திரங்கள் உச்சரித்து பூஜை செய்யப்பட்டது. பூஜையின்போது பாகவதா்கள் திருப்பாவை பாடினா்.

நிகழ்ச்சியில் பாரதிய கிஸான் சங்க மாநில துணைத் தலைவா் ராமமூா்த்தி, மாவட்டத் தலைவா் பட்டாபி, விஸ்வ இந்து பரிஷத் மாவட்டச் செயலா் பாஸ்கா் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT