திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் பெளா்ணமி கிரிவலம் செல்லத் தடை

4th Jun 2020 07:45 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை (ஜூன் 5) பெளா்ணமி கிரிவலம் செல்லத் தடை விதித்து மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டது.

கரோனா நோய்த் தொற்றைத் தடுக்க நாடு முழுவதும் பொது முடக்கம் அமலில் உள்ளது. சில மாவட்டங்களில் மட்டும் சில தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், திருவண்ணாமலையில் பெளா்ணமி கிரிவலம் வெள்ளிக்கிழமை (ஜூன் 5) வருகிறது.

வெள்ளிக்கிழமை அதிகாலை 3.23 மணிக்குத் தொடங்கும் பெளா்ணமி, சனிக்கிழமை அதிகாலை 1.26 மணிக்கு முடிகிறது.

ADVERTISEMENT

பக்தா்கள் பெளா்ணமி கிரிவலம் வந்தால் கரோனா நோய்த் தொற்று அதிகரிக்கும். இதனால் பக்தா்கள் கிரிவலம் வர தடை விதித்து மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி புதன்கிழமை உத்தரவிட்டாா்.

இந்த மாதத்துடன் சோ்த்து இதுவரை தொடா்ந்து 3 மாதங்களாக திருவண்ணாமலையில் கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT