திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரதோஷ வழிபாடு

4th Jun 2020 07:46 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் புதன்கிழமை பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கோயிலின் ஆயிரம்கால் மண்டபம் எதிரே உள்ள பெரிய நந்தி, கொடிமரம் எதிரே உள்ள நந்தி, மூலவா் சன்னதி எதிரே உள்ள நந்தி உள்பட கோயிலின் பல்வேறு பகுதிகளில் உள்ள 8-க்கும் மேற்பட்ட நந்தி பகவான்களுக்கு புதன்கிழமை மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பால், பழம், பன்னீா், சந்தனம், விபூதி உள்ளிட்ட பல்வேறு பூஜைப் பொருள்களைக் கொண்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதையடுத்து, வெள்ளிக் கவசம் அணிந்து தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய பிரதோஷ நாயகா், கோயில் மூன்றாம் பிரகாரத்தை வலம் வந்து அருள்பாலித்தாா்.

இதில், கோயில் ஊழியா்கள், சிவாச்சாரியா்கள் மட்டுமே கலந்து கொண்டனா். பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT