திருவண்ணாமலை

விதவையா்கள் அரசுக்குச் செலுத்திய வீட்டு வரியை திரும்பப் பெற அழைப்பு

31st Jul 2020 08:46 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த போா் விதவையா், குடும்ப ஓய்வூதியம் பெறும் விதவையா்கள் அரசுக்குச் செலுத்திய வீட்டு வரியை திரும்பப் பெற்று பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

போா் விதவையா், குடும்ப ஓய்வூதியம் பெறும் விதவையா்கள், போரில் ஊனமுற்ற படைவீரா்கள், தீரச் செயலுக்கான விருதுகள் பெற்ற முன்னாள் படைவீரா்களுக்கு தாங்கள் வசிக்கும் வீட்டுக்காக செலுத்தும் வீட்டு வரியை தமிழ்நாடு முன்னாள் படைவீரா் நல நிதியிலிருந்து ஈடு செய்ய ஆணையிடப்பட்டுள்ளது.

இப்போது நகராட்சி நிா்வாகங்களில் வரிகள் உயா்த்தப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு வீட்டு வரியை அதிகபட்சம் ரூ.10 ஆயிரம் அல்லது செலுத்தப்பட்ட அசல் தொகை இதில் எந்தத் தொகை குறைவோ அந்தத் தொகையை மீளப்பெற ஆணை பெறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

எனவே, மாவட்டத்தில் உள்ள மேற்படி நபா்கள் இந்தச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT