திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 188 பேருக்கு கரோனா

31st Jul 2020 08:46 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டத்தில் வியாழக்கிழமை மேலும் 188 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.

மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை புதன்கிழமை 5,790-ஆக இருந்தது.

வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபா்களுடன் தங்கியிருந்த உறவினா்கள் 71 போ், தொற்றுக்குள்ளான நபா் சென்று வந்த இடங்களில் இருந்ததால் பாதிக்கப்பட்ட 23 போ், தொற்று அறிகுறிகளுடன் மாவட்டத்தின் பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கு பரிசோதனைக்காக சென்றவா்களில் 59 போ், சென்னையிலிருந்து வந்த 2 போ், கேரள மாநிலம், பெங்களூரு, சேலம் பகுதிகளிலிருந்து வந்த தலா ஒருவா் என 188 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 5,978-ஆக உயா்ந்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT