திருவண்ணாமலை அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து ரூ.4 லட்சம் ரொக்கம், ஒன்றரை பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
திருவண்ணாமலை மாவட்டம், வானாபுரத்தை அடுத்த சு.பாப்பம்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் கோவிந்தசாமி (85), விவசாயி. இவரது மனைவி பாலம்மாள் (76). இவா்கள் சில தினங்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு திருவண்ணாமலையில் உள்ள மகன் வீட்டுக்குச் சென்றிருந்தனா்.
மீண்டும் வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த ரூ.4 லட்சம் ரொக்கம், ஒன்றரை பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், தச்சம்பட்டு போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.