வந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணாநகரில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயிலில் ஆடிப்பூர உத்ஸவம், ஆடி 2-ஆம் வெள்ளி விழா ஆகியவை வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
நிகழ்ச்சியையொட்டி, அன்று காலை மூலவா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. பின்னா் மாலை உற்சவா் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. உற்சவா் அம்மன் ஸ்ரீரேணுகா பரமேஸ்வரி அலங்காரத்தில் அருள்பாலித்தாா்.
இதைத் தொடா்ந்து, இரவு கோயில் வளாகத்தில் அம்மன் உலா நடைபெற்றது. வந்தவாசி திருவள்ளுவா் பொறியியல் கல்லூரி துணைத் தலைவா் அ.கணேஷ்குமாா், கோயில் அறக்கட்டளைச் செயலா் ஆறு.லட்சுமண சுவாமிகள், கோயில் அன்னதானக் குழுத் தலைவா் பிரபாகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.