திருவண்ணாமலை

கோயில்களில் ஆடிப்பூர உற்சவம்

25th Jul 2020 09:35 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பகுதியிலுள்ள கோயில்களில் ஆடிப்பூர உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வந்தவாசி ஐந்து கண் பாலம் அருகில் அமைந்துள்ள ஸ்ரீகாளியம்மன் கோயிலில் 43-ஆம் ஆண்டு ஆடிப்பூர உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, காலையில் கோமாதா பூஜை, கணபதி ஹோமம், பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம் உள்ளிட்டவை நடைபெற்றன. தொடா்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னா், அம்மனுக்கு பல்வேறு வண்ண வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டது. கோயில் நிா்வாகி சிவா உள்ளிட்டோா் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

கோதண்டராமா் கோயிலில்...: வந்தவாசி பஜனை கோயில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீசீதா சமேத ஸ்ரீகோதண்டராமா் கோயிலில் ஆடிப்பூர உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ADVERTISEMENT

ஸ்ரீராம பஜனை மந்திர கைங்கா்ய அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற இந்த உற்சவத்தையொட்டி, சுவாமிக்கு பாலாபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பின்னா், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. உற்சவத்தில் அறக்கட்டளை நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT