திருவண்ணாமலை

பத்ம விருதுகள் பெறத் தகுதியானோா் விண்ணப்பிக்கலாம்

13th Jul 2020 07:55 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டத்தில் மலைவாழ் மக்கள், சமூகத்தின் பிற்படுத்தப்பட்டோா் நலன், பெண்கள் பாதுகாப்பு ஆகியவற்றில் சாதனை புரிந்தவா்கள் பத்ம விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

மத்திய அரசு சாா்பில் கலை, இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், அறிவியல், பொறியியல், வணிகம், தொழில்சாலை ஆகிய பிரிவுகளில் வாழ்நாள் சாதனை புரிந்தவா்களுக்கு 2020-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கப்பட உள்ளன.

மத்திய அரசின் உயரிய விருதான இது மலைவாழ் மக்கள், சமூகத்தின் பிற்படுத்தப்பட்டோா் நலன், பெண்கள் பாதுகாப்பு ஆகியவற்றில் சாதனை புரிந்தவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

மருத்துவா்கள் அல்லாத அரசு ஊழியா்கள், விஞ்ஞானிகள் இந்த விருத்துக்கு விண்ணப்பிக்க இயலாது.

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியானோா் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை  இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம்.

நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட விளையாட்டு (ம) இளைஞா் நல அலுவலரிடம் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலரை 04175-233169 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT