செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சங்கக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு கல்லூரித் தலைவா் எஸ்.வெங்கடாசலபதி தலைமை வகித்தாா். ஆன்மிக சொற்பொழிவாளா் தனஞ்செயன் முன்னிலை வகித்தாா். கல்லூரித் தலைவா் பரிமளாஜெயந்தி வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை பேராசிரியா் சபரி கலந்துகொண்டு மாணவா்களிடையே பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்துப் பேசினாா்.
தொடா்ந்து, முன்னாள் மாணவா்கள் கல்லூரியில் படித்த அனுபவங்கள் மற்றும் தற்போது பணி செய்யும் இடத்தில் கிடைத்த அனுபவங்கள் குறித்து பரிமாற்றம் செய்து பேசினா்.