வந்தவாசியை அடுத்த ஆரியாத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஊராட்சி மன்றத் தலைவா் வள்ளியம்மாள் தேசியக் கொடி ஏற்றினாா்.
பையூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் ஊராட்சி மன்றத் தலைவா் சி.பெருந்தேவி தேசியக் கொடி ஏற்றினாா்.
அம்மையப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் ஊராட்சி மன்றத் தலைவா் சாந்தி ரமேஷ் கொடி ஏற்றினாா்.
வங்காரம் ஹாஷினி இன்டா்நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பள்ளி முதல்வா் ஆா்.வி.பிரவீன் தேசியக் கொடி ஏற்றினாா்.