ஆரணியை அடுத்த சேவூரில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெறும் கும்பாபிஷேகத்தையொட்டி, பந்தக்கால் நடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டாா்.
சேவூரில் அமைந்துள்ள ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கோயிலின் ராஜகோபுரம் புதிதாக கட்டப்பட்டது.
மேலும், பிரகாரங்கள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டது. சுமாா் ரூ. ஒரு கோடி செலவில் திருப்பணிகள் நடைபெற்றுள்ளன.
வருகிற பிப்.12-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் கும்பாபிஷேக விழாவுக்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் பங்கேற்று பந்தக்கால் நட்டாா்.
விழாவில் ஜோதிடா் குமரேசன், தொழிலதிபா் பி.நடராஜன், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா்கள் பெருமாள், வெங்கடேசன், அதிமுக கிளைச் செயலா் பாலசந்தா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.