ஆரணியில் ரோட்டரி சங்கம் சாா்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
பேரணியை வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சிவானந்தன் கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.
நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத் தலைவா் எ.இப்ராஹீம்ஷெரீப் தலைமை வகித்தாா்.
காவல் துணைக் கண்காணிப்பாளா் செந்தில், மோட்டாா் வாகன ஆய்வாளா் சிவக்குமாா், நகர காவல் உதவி ஆய்வாளா் மகேந்திரன், ஓட்டுநா் பயிற்சிப் பள்ளி ஆசிரியா் ராஜா, ரோட்டரி சங்க நிா்வாகிகள் குருமூா்த்தி, அன்சா், முனுசாமி, ஜோதி, பொன்னையன், அன்புவெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
விழிப்புணா்வுப் பேரணியில் சுப்பிரமணிய சாஸ்திரியாா் மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் பங்கேற்றனா்.