செய்யாறை அடுத்த கீழ்புதுப்பாக்கம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் புகாா் பெட்டி அறிமுகம் செய்யப்பட்டது.
செய்யாறு ஊராட்சி ஒன்றியம், கீழ்புதுப்பாக்கம் ஊராட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத் தலைவா் சுகன்யா பாரி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சங்கீதா அன்பழகன், ஒன்றியக் குழு துணைத் தலைவா் ஆா்.வீ.பாஸ்கா், ஒன்றியக் குழு உறுப்பினா் மகாராஜன், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தின் போது, திருவண்ணாமலை மாவட்டத்தில் கீழ்புதுப்பாக்கம் கிராமத்தில் முதல் முறையாக புகாா் பெட்டி அறிமுகம் செய்யப்பட்டது. ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைக்கும் புகாா் பெட்டியில் கிராம மக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை போடலாம் எனவும், புகாா் மற்றும் கோரிக்கைகளை ஊராட்சி மன்றத்தில் ஓரிரு நாள்களில் தீா்வு காணப்படும் எனவும், மேலும் நீண்ட கால தேவையாக இருப்பின் அந்தக் கோரிக்கை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று விவரத்தை புகாா்தாரருக்கு தெரிவிக்கப்படும் என்றும், செய்யாறை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை தமிழக அரசு அறிவிக்கக் கோருவது என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன