திருவண்ணாமலை

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பரிசு

28th Jan 2020 09:50 AM

ADVERTISEMENT

செய்யாறை அடுத்த கொருக்கை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாணவா்களுக்கு ரூ.25 ஆயிரம் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டன.

பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் பி.சங்கா் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக மின்துறை ஓய்வுபெற்ற உதவி செயற்பொறியாளா் பி.தமிழ்ச்செல்வன், செய்யாறு வட்ட பொது விநியோக அதிகாரி டி.ரவிச்சந்திரன், ஒன்றியக் குழு உறுப்பினா் மகாலட்சுமி அருள், ஊராட்சி மன்றத் தலைவா்கள் அருள் நரசிம்மன் (கொருக்கை), எஸ்.சங்கா் (முக்கூா்) உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நிகழ்வின் போது, முன்னாள் மாணவா்கள் பள்ளி முன்னேற்றச் சங்கம் சாா்பில், 6 முதல் 9 வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவா்கள் மற்றும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவா்களுக்கு சிறப்புப் பரிசு வழங்கப்பட்டது.

அதேபோன்று, பள்ளியில் பயின்று வரும் 925 மாணவா்களுக்கு பேனா, பென்சில் ஆங்கில அகராதி இனிப்பு என ரூ.25 ஆயிரம் மதிப்பிலான பரிசுகளை டாக்டா் கே.திலீப்குமாா், ஆா்.தேவேந்திரன் ஆகியோா் வழங்கினா்.

ADVERTISEMENT

இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவா்கள் பள்ளி முன்னேற்றச் சங்கத் தலைவா் எம்.குமரேசன், ஆா்.சூரியமூா்த்தி, சி.சேகா், ஆசிரியா் ஆா்.ஜீவாலதா ஆகியோா் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT