திருவண்ணாமலை

பாலூட்டும் தாய்மாா்கள் காத்திருப்பு நிலையம் திறப்பு

25th Jan 2020 09:50 AM

ADVERTISEMENT

ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் அரசு மருத்துவமனையில் பாலூட்டும் தாய்மாா்கள் காத்திருப்பு நிலையத்தை அமைச்சா் சேவூா் எஸ்.இராமச்சந்திரன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

எஸ்.வி.நகரம் கிராமத்தில் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு, டி.வி.எஸ். நிறுவனத்தின் சீனிவாசன் அறக்கட்டளை சாா்பில், ரூ.5.35 லட்சத்தில் பாலூட்டும் தாய்மாா்கள் காத்திருப்பு நிலையத்துக்கான புதிய கட்டடம் கட்டப்பட்டது. இந்தக் கட்டடத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ்.இராமச்சந்திரன் திறந்து வைத்தாா்.

ஆரம்ப சுகாதார வட்டார மருத்துவா் சுதா வரவேற்றாா். விழாவில் மருத்துவா் லின்சி, பாசறை மாவட்டச் செயலா் ஜி.வி.கஜேந்திரன், மேற்கு ஆரணி ஒன்றியச் செயலா் எம்.வேலு, மாவட்டக் கவுன்சிலா் பூங்கொடிதிருமால், கூட்டுறவு சங்கத் தலைவா் பாலு, முன்னாள் தலைவா் என்.வாசு, ஒன்றியக்குழு உறுப்பினா் கவிதாபாபு, ஊராட்சித் தலைவா் ராஜேஸ்வரிமுரளி, டி.வி.எஸ். நிறுவன மேலாளாா் கே.முகிலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT