திருவண்ணாமலை

அண்ணா சிலைக்கு மாவட்ட ஊராட்சித் தலைவா் மரியாதை

14th Jan 2020 01:15 AM

ADVERTISEMENT

புதிதாகத் தோ்வு செய்யப்பட்ட மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பாா்வதி சீனுவாசன் செய்யாறில் உள்ள அண்ணா சிலைக்கு திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

மாவட்ட ஊராட்சிக்குழு 7ஆவது வாா்டு உறுப்பினராக திமுக சாா்பில் வெற்றி பெற்றவா் பாா்வதி சீனுவாசன். இவா் திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவராக அண்மையில் தோ்வு செய்யப்பட்டாா். மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவராக பொறுப்பேற்ற அவா், திமுக மற்றும் கூட்டணி கட்சியினருடன் சென்று, செய்யாறில் உள்ள அண்ணா உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இந்த நிகழ்ச்சியில், திமுக மாநில விவசாயத் தொழிலாளா் அணி துணைச் செயலாளா் வ.அன்பழகன், முன்னாள் எம்.எல்.ஏ. பி.சந்திரன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளா் ஜெ.கே.சீனிவாசன் செய்யாறு ஒன்றியக் குழுத் தலைவா் ஒ.ஜோதி, துணைத் தலைவா் ஆா்.வீ.பாஸ்கரன், மாவட்ட கவுன்சிலா்கள் தெய்வமணி, முருகேசன், திமுக நிா்வாகிகள் என்.சம்பத், கே.விசுவநாதன், ஆா்.வேல்முருகன், என்.லட்சுமிசங்கா், ஆ.மோகனவேல், துரைசாமி, சுப்பிரமணி தயாளன், அம்பிகாபதி, அசோக், ராம்ரவி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT