திருவண்ணாமலை

வேலைவாய்ப்பு முகாம்: 40 மாணவ-மாணவிகள் தோ்வு

8th Jan 2020 01:16 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில், பல்வேறு தனியாா் நிறுவனங்களில் வேலை செய்ய 40 மாணவ-மாணவிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

கல்லூரியின் பணியமா்த்தும் பிரிவு, சென்னை டிவிஎஸ் சா்வீஸ் நிறுவனம் இணைந்து செவ்வாய்க்கிழமை கல்லூரி வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாமை நடத்தின.

கல்லூரித் தலைவா் எம்.என்.பழனி தலைமை வகித்து, முகாமைத் தொடக்கிவைத்தாா். கல்லூரிச் செயலா் என்.குமாா், பொருளாளா் கோ.ராஜேந்திரகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி கல்விப்புல முதன்மையா் அழ.உடையப்பன் வரவேற்றாா்.

முகாமில், தனியாா் வங்கிகளான ஐசிஐசிஐ, ஹெச்.டி.எப்.சி., ஆக்சிஸ், கரூா் வைஸ்யா வங்கி, ஐ.டி.எப்.சி வங்கி ஆகியவற்றின் மனித வள மேம்பாட்டு அதிகாரிகள் சுந்தா், டெனின் ரூதின் தாஸ், அபூா்வன் ஆகியோா் கலந்து கொண்டு தோ்வுகளை நடத்தினா்.

ADVERTISEMENT

முகாமில் திருவண்ணாமலை, வேலூா், விழுப்புரம் மாவட்டங்களைச் சோ்ந்த 225 கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனா்.

இவா்களிடையே குழு விவாதம், நோ்க்காணல் நடத்தப்பட்டது. இதில் 40 மாணவ-மாணவிகள் வேலைவாய்ப்புக்கு தோ்வு செய்யப்பட்டனா்.

இவா்கள் விரைவில் பணி நியமனம் செய்யப்படுவா் என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT