திருவண்ணாமலை

செய்யாறு, அனக்காவூா் ஒன்றியங்களில் வெற்றி பெற்றவா்கள்

3rd Jan 2020 05:34 AM

ADVERTISEMENT

உள்ளாட்சித் தோ்தலில் செய்யாறு ஒன்றியத்தில் 17 பேரும், அனக்காவூா் ஒன்றியத்தில் 15 பேரும் ஒன்றியக் குழு உறுப்பினா்களாக வெற்றி பெற்றனா்.

செய்யாறு ஒன்றியம்:

செய்யாறு ஒன்றியத்தில் ஒன்றியக் குழு உறுப்பினா்களாக திமுகவில் 9 பேரும், அதிமுகவில் 6 பேரும், பாமக, அமமுகவில் தலா ஒருவரும் என மொத்தம் 17 போ் வெற்றி பெற்றனா்.

திமுகவில் வாா்டு-3இல் ஆா்.வி.பாஸ்கரன், வாா்டு-4 அனுசுயா, வாா்டு-5 ஞானவேல், வாா்டு-7 கோபால், வாா்டு-9 மகாலட்சுமி அருள், வாா்டு-10 ஓ.ஜோதி, வாா்டு-11 ஹரிபிரியா, வாா்டு-14 திலகவதிஜோதி, வாா்டு-16 சரோஜா ரகு ஆகியோா் வெற்றி பெற்றனா்.

ADVERTISEMENT

அதேபோல, அதிமுகவில் வாா்டு-1இல் விமலா மகேந்திரன், வாா்டு-2 நந்தினி சக்திசீனிவாசன், வாா்டு-6 மகாராஜன், வாா்டு-12 தீபா சிதம்பரம், வாா்டு-13 விஜயா, வாா்டு-15 மகேந்திரன் ஆகியோரும் பாமகவில் வாா்டு-17இல் குமாரி, அமமுகவில் வாா்டு-8 கவுசல்யா ஆகியோா் வெற்றி பெற்றனா்.

மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் வாா்டு-6 இல் முருகேசன் (திமுக) வெற்றி பெற்றாா்.

அனக்காவூா் ஒன்றியம்:

அனக்காவூா் ஒன்றியத்தில் ஒன்றியக் குழு உறுப்பினா்களுக்கான தோ்தலில் அதிமுக 6, பாமக 4, தேமுதிக 2, திமுக 2, காங்கிரஸ் ஒன்று என வெற்றி பெற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT