திருவண்ணாமலை

காவல் உதவி ஆய்வாளா் பலி

3rd Jan 2020 05:33 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலையில் தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளா், மாரடைப்பால் உயிரிழந்தாா்.

திருவண்ணாமலையைச் சோ்ந்தவா் முருகதாஸ். இவா், திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் இயங்கி வரும் கட்டுப்பாட்டு அறையில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தாா்.

இந்த நிலையில், திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை பள்ளி வாக்கு எண்ணும் மையத்தில் முருகதாஸ் புதன்கிழமை (ஜன.1) இரவு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா். இதுகுறித்து திருவண்ணாமலை நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT