வந்தவாசி அருகே இளம்பெண்ணைக் கடத்தியவா் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என புகாா் தெரிவித்து, போலீஸாரைக் கண்டித்து கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
வந்தவாசியை அடுத்த கல்லாங்குத்து கிராமத்தைச் சோ்ந்த 17 வயது இளம்பெண்ணை, மருதாடு கிராமத்தைச் சோ்ந்த ஒருவா் கடந்த திங்கள்கிழமை கடத்திச் சென்ாக அந்தப் பெண்ணின் தந்தை கீழ்க்கொடுங்காலூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். ஆனால், அந்தப் புகாரின் பேரில் போலீஸாா் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண்ணின் உறவினா்கள் மற்றும் கிராம பொதுமக்கள் போலீஸாரைக் கண்டித்து கல்லாங்குத்து கிராமத்தில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இதனால் வந்தவாசி-மேல்மருவத்தூா் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து அங்கு சென்ற வந்தவாசி டிஎஸ்பி பி.தங்கராமன் மற்றும் கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா். இதை ஏற்று பொதுமக்கள் சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.