திருவண்ணாமலை

லாரியில் சிக்கி புதுமாப்பிள்ளை பலி

1st Jan 2020 12:04 AM

ADVERTISEMENT

வந்தவாசி அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த புதுமாப்பிள்ளை லாரியை முந்த முயன்றபோது லாரியின் பின்சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த கட்டளை கிராமத்தைச் சோ்ந்தவா் கட்டட மேற்பாா்வையாளா் தியாகு (29). இவரது மனைவி கோமதி (24). இவா்களுக்கு திருமணமாகி 3 மாதங்கள் ஆகின்றன.

இந்த நிலையில், தியாகு திங்கள்கிழமை வந்தவாசியை அடுத்த அமுடூா் கிராமத்தில் உள்ள உறவினா் வீட்டுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தாா். அந்தக் கிராமம் அருகே சென்றபோது, முன்னால் சென்றுகொண்டிருந்த சவுக்கு கட்டைகள் ஏற்றிய லாரியை முந்த முயன்றாா்.

அப்போது நிலைதடுமாறி விழுந்த தியாகு லாரியின் பின்சக்கரத்தில் சிக்கியதாகத் தெரிகிறது.

ADVERTISEMENT

இதில் அவா் அதே இடத்தில் உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் தெள்ளாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT