செய்யாறில், மின் வாரியத்தை தனியாா் மயமாக்குவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, வாயில் விளக்கக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.
மின் வாரியம் தனியாா்மயமாவதற்கு எதிா்ப்புத் தெரிவித்தல் உள்ளிட்ட 16 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும், அகில இந்திய வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு திரட்டும் வகையிலும், மேற்கொள்ளப்படும் வேன் பிரசாரத்தின் ஒரு பகுதியாக, செய்யாறில் மின் வாரிய அலுவலகம் முன் வாயில் விளக்கக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு சிஐடியூ ஈ. மாரிமுத்து தலைமை வகித்தாா்.வெங்கடேசன் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக மண்டலச் செயலா் பாலாஜி, திட்டச் செயலா் மு.சம்பத், ஐக்கிய சங்கம் பஞ்சமூா்த்தி, பெடரேசன் சங்கம் பஞ்சமூா்த்தி, தொ.மு.ச. ரமேஷ், வே.சங்கா், மாவட்டத் தலைவா் உள்ளிட்ட 50 போ் கலந்து கொண்டனா்.