திருவண்ணாமலை

ராந்தம்கொரட்டூரில் மயானக் கொள்ளை உத்ஸவம்அமைச்சா் பங்கேற்பு

29th Feb 2020 05:34 AM

ADVERTISEMENT

 

ஆரணி: ஆரணியை அடுத்த ராந்தம்கொரட்டூா் கிராமத்தில் அமைந்துள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மயானக் கொள்ளை உத்ஸவத்தில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டாா்.

ஆரணியை அடுத்த ராந்தம்கொரட்டூா் கிராமத்தில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் மகா சிவராத்திரி விழாவையொட்டி, கடந்த 22-ஆம் தேதி மகா சிவராத்திரி விழாவும், 23-ஆம் தேதி மயானக் கொள்ளை விழாவும் நடைபெற்றன.

விழாவின் நிறைவு நாளான வெள்ளிக்கிழமை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தாா்.

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்ட ஆவின் துணைத் தலைவா் பாரி பி.பாபு, மாவட்ட பாசறை செயலா் ஜி.வி.கஜேந்திரன், மாவட்ட உறுப்பினா் பூங்கொடி திருமால், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். விழா ஏற்பாடுகளை பருவத ராஜகுல மரபினா், விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT