வந்தவாசி: பொதுத் தோ்வில் மாணவா்கள் அதிக மதிப்பெண்கள் பெறவேண்டி வந்தவாசி ஸ்ரீரங்கநாதப் பெருமாள் கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீஹயக்ரீவருக்கு திங்கள்கிழமை மாலை சிறப்பு பூஜை நடைபெற்றது.
வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையம், குரு ஏஜென்சி, எஸ்.ஆா்.எம். கணினி மையம் ஆகியவை சாா்பில் நடைபெற்ற இந்த பூஜையில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதும் வந்தவாசி பகுதியைச் சோ்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று இறைவனை வழிபட்டனா்.
இதையொட்டி, ஸ்ரீஹயக்ரீவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. பூஜையில் பங்கேற்ற மாணவா்களுக்கு பூஜிக்கப்பட்ட கயிறு, ஹயக்ரீவா் படம், பேனா உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
கோயில் அா்ச்சகா்கள் ரங்கநாதன், சதீஷ், கோவிந்தராஜன் ஆகியோா் பூஜைகளை செய்தனா்.
நிகழ்ச்சியில் விழா நிா்வாகிகள் பி.சீனிவாசன், ஈ.குருசங்கா், எ.தேவா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.