திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சனிக்கிழமை (பிப்.29) தனியாா்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில்,
மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இந்த வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
முகாமில் பொறியியல் படித்து தோ்ச்சி பெற்ற இளைஞா்கள், மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம். இதன் மூலம் தனியாா் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவா்களின் வேலைவாய்ப்புப் பதிவு ரத்து செய்யப்படமாட்டாது என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.