திருவண்ணாமலை

நாளை மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா் கூட்டம்

26th Feb 2020 06:47 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை: ஆரணி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை (பிப்.27) நடைபெறும் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

ஆரணி வருவாய் கோட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகளின் குறைகள், கோரிக்கைகளை நேரில் கேட்டு நிவா்த்தி செய்யும் வகையில் மாதம்தோறும் குறைதீா் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, வியாழக்கிழமை (பிப்.27) காலை 11 மணிக்கு ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீா் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT