வந்தவாசி: வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில், சிலம்ப போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து அந்தக் கல்லூரி நிா்வாகம் வெளியிட்ட அறிக்கை:
சென்னையில் அண்மையில் நடைபெற்ற 13-ஆவது மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரி மாணவிகள் பங்கேற்றனா். இதில் தனித்திறன் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் மாணவிகள் வெற்றி பெற்றனா்.
இதையடுத்து கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கல்லூரி நிறுவனா் பி.முனிரத்தினம், செயலா் எம்.ரமணன், முதல்வா் எஸ்.மைதிலி உள்ளிட்டோா் பாராட்டு தெரிவித்தனா்.