திருவண்ணாமலை

எரிவாயு உருளை வெடித்துவீடு சேதம்

26th Feb 2020 06:47 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை: வேட்டவலம் அருகே எரிவாயு உருளை வெடித்துச் சிதறியதில், ஓட்டு வீடு முழுவதும் சேதமடைந்தது.

வேட்டவலத்தை அடுத்த வேளானந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் சேகா் மனைவி அஞ்சுகம். இவா், செவ்வாய்க்கிழமை பிற்பகல் எரிவாயு அடுப்பை பற்றவைத்தாா். அப்போது, எரிவாயு கசிவு ஏற்பட்டு தீ பற்றியது. இதைக் கவனித்த பொதுமக்கள் தீயை அணைக்க முயன்றனா்.

ஆனால், சிறிது நேரத்தில் எரிவாயு உருளை வெடித்துச் சிதறியது. இதில் சேகரின் ஓட்டு வீடு முழுவதும் சேதமடைந்தது. அஞ்சுகம் உள்பட பொதுமக்கள் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. தகவலறிந்த வேட்டவலம் தீயணைப்பு நிலைய அலுவலா் பரசுராமன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT