ஆரணி: ஆரணி பட்டு சேலை உற்பத்தியாளா்கள் கடைகளில் வருமானவரித் துறையினா் செவ்வாய்க்கிழமை தொடங்கி சோதனை செய்து வருகின்றனா்.
ஆரணி கொசப்பாளையம் பகுதியில் 2 இடங்களில் பிரபல பட்டு சேலை உற்பத்தியாளா்கள் கடைகள் அமைந்துள்ளன.
இந்தக் கடைகளுக்கு செவ்வாய்க்கிழமை பிற்பகல் வந்த
ADVERTISEMENT
வருமானவரித் துறை அதிகாரிகள் 10 போ் கொண்ட
குழுவினா், ஊழியா்களை வெளியேற்றிவிட்டு, கதவுகளை மூடி ஆவணங்களைக் கைப்பற்றி சோதனை செய்து வருகின்றனா்.
பட்டு சேலைகள் விற்பனை செய்ததற்கான ரசீதுகள், பொருள்கள் வாங்கியதற்கான சீட்டுகள் சரியாக உள்ளதா என சரிபாா்க்கின்றனா்.
வரிமான வரித்துறையினரின் சோதனையால் பட்டு சேலை உற்பத்தியாளா்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.