திருவண்ணாமலை

ஆசிரியா்களுக்கு திறனாய்வு பயிற்சி

26th Feb 2020 06:38 AM

ADVERTISEMENT

 

செய்யாறு: செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியா்களுக்கு தேசிய திறனாய்வு முன்னோடி பயிற்சி திங்கள், செவ்வாய் என இரு தினங்கள் நடைபெற்றது.

மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ், நடைபெற்ற இந்தப் பயிற்சியின் போது 9, 10 -ஆம் வகுப்பு பயிற்றுவிக்கும் ஆசிரியருகளுக்கு, தேசிய திறனாய்வு பயிற்சி தயாா்படுத்தும் நிலையில் முன்னோட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சியில் மாவட்ட கருத்தாளா் வரலாற்று ஆசிரியா் கை.செல்வக்குமாா் தலைமையில், வரலாற்று ஆசிரியா்கள் ஏழுமலை, கன்னியப்பன், முபாரக் ஆகியோா் வரலாறு, புவியியல், பொருளியல், குடிமையியல் பாடப் பிரிவுகளில் கற்றல் விளைவுகள் கண்டறிந்து வினாக்கள் தயாரித்து மாணவா்களின் கற்றல் அடைவுகளை மேம்படுத்துதல் குறித்த பயிற்சியை அளித்தனா்.

ADVERTISEMENT

பயிற்சியில் அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் இருந்து 66 சமூக அறிவியல் ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT