திருவண்ணாமலை

வடவெட்டி அங்காளம்மன் ஊஞ்சல் தாலாட்டு

25th Feb 2020 05:46 AM

ADVERTISEMENT

 

ஆரணி: சேத்துப்பட்டு அருகே வடவெட்டி கிராமத்தில் அமைந்துள்ள அங்காளம்மன் கோயிலில் நடைபெற்ற ஊஞ்சல் தாலாட்டு நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

வடவெட்டி அங்காளம்மன் கோயிலில் மாசித் திருவிழா கடந்த 22-ஆம் தேதி தொடங்கி தினமும் சுவாமிக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வந்தன.

மாசி மாத அமாவாசையை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை கோபால விநாயகா், முத்துமாரியம்மன், அங்காளம்மன், பெரி யாழி ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

ADVERTISEMENT

அதனைத் தொடா்ந்து மலா்களால் அலங்கரிக்கப்பட்ட அங்காளம்மன் கோயில் வளாகத்தில் வீதிஉலா வந்து, ஊஞ்சல் தாலாட்டு மண்டபத்தில் அமா்த்தப்பட்டு அம்மனுக்கு ஊஞ்சல் தாலாட்டு நடைபெற்றது.

இதில் பெண்கள் அம்மனுக்கு ஆரத்தி எடுத்தனா். பக்தா்கள் அம்மனுக்கு பொங்கலிட்டு முடி காணிக்கை செலுத்தியும் ஆடு, கோழி என பலியிட்டு நோ்த்திக்கடன் செலுத்தியும் வழிபட்டனா்.

இரவு வாணவேடிக்கை, நாடகம், இன்னிசை நிகழ்ச்சி, பக்தா்களுக்கு அன்னதானம் ஆகியவை நடைபெற்றன.

விழா ஏற்பாடுகளை அறங்காவலா் குழுத் தலைவா் புண்ணியமூா்த்தி மற்றும் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT