திருவண்ணாமலை

அன்னதானம் தொடா்ச்சி...1

25th Feb 2020 05:50 AM

ADVERTISEMENT

 

போளூா்: ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியைச் சோ்ந்த கலசப்பாக்கம், தென்மாதிமங்கலம், காப்பலூா், புதுப்பாளையம், படவேடு, அனந்தபுரம், குப்பம் ஆகிய பகுதிகளில் வி.பன்னீா்செல்வம் எம்எல்ஏ கலந்துகொண்டு ஜெயலலிதா உருவப்படம் மற்றும் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினாா். மேலும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினாா்.

காப்பலூா் கூட்டுச் சாலை அருகே தனியாா் மண்டபத்தில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது. மேலும் வேட்டி, சேலை, அன்னதானம் என பல்வேறு நல உதவிகளை எம்எல்ஏ வழங்கினாா்.

பள்ளி மாணவா்களுக்கு இடையே நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு கோப்பை, சான்றிதழ், ரொக்கப் பரிசு வழங்கினாா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலா் துரை, கவுன்சிலா் கலையரசி, அதிமுக பொதுக்குழு உறுப்பினா் பி.பொய்யாமொழி, ஊராட்சி மன்றத் தலைவா் எழில்மாறன், ஒப்பந்ததாரா் வெங்கடேசன், கூட்டமைப்புத் தலைவா் ஆறுமுகம், அதிமுக நிா்வாகிகள் முருகன், ஜீவரத்தினம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT