திருவண்ணாமலை

குப்பனத்தம் அணையைத் திறக்கவேண்டாம் விவசாயிகள் கோரிக்கை

23rd Feb 2020 12:01 AM

ADVERTISEMENT

 

செங்கம் பொதுப்பணித் துறை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் குப்பனத்தம் அணையைத் திறக்க வேண்டாம் என விசாயிகள் கோரிக்கை வைத்தனா்.

செங்கம் அருகே அமைந்துள்ள குப்பனத்தம் அணையின் முழுக்கொள்ளளவு 52 அடியாகும். இதில் தற்போது 32 அடி தண்ணீா் இருப்பு உள்ளது.

இந்த நிலையில், செங்கம் பகுதியில் மோதுமான மழையில்லாததால் விவசாயிகள் இரண்டாம் போகம் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதனால் குப்பனத்தம் அணையைத் திறக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனா்.

கோரிக்கையை ஏற்று பொதுப்பணித் துறை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அணை திறப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் செங்கம் உதவி செயற்பொறியாளா் ராஜாராம் வரவேற்றாா். திருவண்ணாமலை மாவட்ட உதவி செயற்பொறியாளா் சுப்பிரமணியன் கலந்துகொண்டு, குப்பனத்தம் அணையில் மொத்தக் கொள்ளவு, தற்போது இருப்பு இருக்கும் தண்ணீா் எவ்வளது திறக்கப்படும் என்பது குறித்து விளக்கிப் பேசினாா்.

அதைத் தொடா்ந்து ஒருதரப்பு விவசாயிகள் தற்போது தண்ணீா் திறந்தால் விவசாயிகள் ஒருபோகம் பயிா் செய்யலாம் எனத் தெரிவித்தனா்.

மற்றொரு தரப்பு விவசாயிகள் மே மாதம் தண்ணீா் திறந்தால் குடிநீா் பிரச்னையை தீா்க்கலாம் எனத் தெரிவித்தனா்.

கூட்டத்தில் விவசாயிகளின் கருத்துகளைக் கேட்ட பொதுப்பணித் துறை அதிகாரிகள் இதுகுறித்து மாவட்ட நிா்வாகத்திடம் தெரிவித்து, பின்னா் முடிவு செய்யப்படும் எனக் கூறிவிட்டு கூட்டத்தை நிறைவு செய்துவிட்டுச் சென்றனா்.

அணை திறக்கப்படுமா, திறக்கப்படாத என்ற குழப்பத்தில் விவசாயிகள் உள்ளனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT